திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் சுமார் 20 ஆண்டு காலமாக தரைக்கடை நடத்தி பிழைத்து வந்த 70க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் கடை நடத்த இடம் வழங்க வேண்டும். அரசு பணத்தில் சில ஆயிரம் கோடி செலவு செய்து உருவாக்கப்பட்ட பேருந்து நிலையத்தில் தனியார் நிறுவனம் வாடகை கொள்ளை நடத்த அனுமதிக்க கூடாது. சாலையோர வியாபாரிகள் பஞ்சப்பூர் பேருந்து நிலைய சாலை ஓரங்களில் வியாபாரம் செய்வதை தடை செய்யக்கூடாது. மத்திய பேருந்து நிலைய வளாகம் முழுவதும் பேருந்து நிலையமாகவே தொடர்ந்து செயல்பட வேண்டும். வேறு பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
சி ஐ டி யு திருச்சி மாநகர் தரைக்கடை தள்ளுவண்டி வியாபாரிகள் சங்கம் சார்பில் திருச்சி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தொடர் முழக்க போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு தரைக்கடை சங்க மாவட்ட தலைவர் கணேசன் தலைமை வகித்தார் போராட்டத்தை விளக்கி தரைக்கடை சங்க மாவட்ட மாவட்ட செயலாளர் செல்வி, சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், மாவட்ட தலைவர் சீனிவாசன் ஆகியோர் பேசினர். இதில் தரைகடை சங்க நிர்வாகிகள் சுரேஷ், புஷ்பாகரன். ஷேக்மொய்தீன், சுப்புரத்தினம், அப்துல்லா, கோபால், ராமச்சந்திரன், செந்தில்குமார், கணேசன், பசுபதிராஜ், நத்தர் அலி, மணிகண்டன், கோவிந்தன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.