கடந்த மாதம் 28ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதிய சங்கத்தின் மாநில செயற்குழு முடிவின்படி தமிழக முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மருத்துவ காப்பீடு திட்டத்தில் தேங்கி கிடக்கும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாவட்ட தலைவர் சிராஜுதீன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மதிவாணன் வரவேற்புரை ஆற்றினார் அதனைத் தொடர்ந்து மாநில செயலாளர் செந்தமிழ்ச்செல்வன் கோரிக்கை விளக்க உரையாற்றினார் மணப்பாறை வட்டக்கிளை தலைவர் வெள்ளைச்சாமி கருத்துரை வழங்கினார்.
இந்த அரை நாள் தர்ணா போராட்டத்தின் கோரிக்கைகளாக:- புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் ஓய்வூதியர்கள் அனுப்பி வைத்த கோரிக்கை மனுக்களின் மீது காப்பீடு நிறுவன முடிவுகள் எடுப்பதில் கால தாமதத்தை ஏற்படுத்தி வருகிறது. காலதாமதத்திற்கான காரணங்கள் தெரிவிக்கப்பட வேண்டும் ஓய்வூதியர்கள் செலவு செய்த தொகைக்கும் காப்பீடு நிறுவனம் வழங்கும் தொகைக்கும் சம்பந்தமே இல்லாத வகையில் சிறு தொகை மட்டும் வழங்கப்பட்டு வருகிறது செலவுத் தொகை முழுமையாக வழங்கப்பட வேண்டும் முன்பணம் இல்லா சிகிச்சை என்ற அரசின் நோக்கம் நிறைவேறவில்லை மாநில கருவூல கணக்கு துறை ஆணையர் மனுக்களின் விவரங்களை ஒவ்வொரு ஓய்வுதியரும் தெரிந்து கொள்ளும் வகையில் ட்ராக்கிங் சிஸ்டம் உருவாக்குவதாக வாக்குறுதி அளித்து கடந்த ஒன்றை ஆண்டு காலம் முடிவடைந்தும் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தெரிந்து கொள்ள ஏற்ற வகையில் கருவூல கணக்கு துறை ஆணையத் தலைமையில் காப்பீடு நிறுவன பிரதிநிதிகள் உடன் ஓய்வூதிய சங்கப் பிரதிநிதிகள் உடனும் முத்தரப்பு பேச்சு வார்த்தை மேற்கொள்ளப்பட வேண்டும் மேலும் கடந்த 31ஆம் தேதி வரை தேங்கியுள்ள மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி இந்த அரை நாள் தர்ணா போராட்டம் நடைபெற்றது.