திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்
துறையின் சார்பில் இன்று நடைபெற்ற “இல்லம் தேடிக் கல்வித் திட்டம்” செயலாக்கம் தொடர்பாக கல்வித்துறை உள்ளிட்ட தொடர்புடைய துறை அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் சமூக அமைப்பின் உறுப்பினர்களுக்கான மாவட்ட அளவிலான பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு, தொடங்கி வைத்துப் பேசினார். அருகில் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் உமா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் வின்சென்ட் பவுல், மாநகராட்சி உதவி ஆணையர் அக்பர் அலி, பேராசிரியர் காளீஸ்வரன் ஆகியோர் உள்ளனர்.