நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான அண்ணல் அம்பேத்கர் , முத்தமிழறிஞர் கலைஞர் , பேரறிஞர் அண்ணா , தந்தை பெரியார் , மகாத்மா காந்தி , ஜவகர்லால் நேரு ஆகியோரின் கருத்துகளையும் சமூகச் சிந்தனைகளையும் இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வண்ணம் அவர்களின் பிறந்த நாளினை முன்னிட்டு திருச்சி மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்குத் தனித்தனியே பேச்சுப்போட்டிகள் தமிழ் வளர்ச்சித் துறையில் நடத்தப்பெற உள்ளன .
போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ .5000 / – , இரண்டாம் பரிசு ரூ .3000 / – , மூன்றாம் பரிசு ரூ .2000 / – என பரிசுத் தொகையும் , பாராட்டுச்சான்றும் வழங்கப்பெற உள்ளன . இவை அல்லாமல் அரசுப்பள்ளி மாணவர்கள் இரண்டு பேரைத் தனியாகத் தெரிவு செய்து ஒவ்வொருவருக்கும் ரூ .2000 / -வீதம் சிறப்புப் பரிசும் வழங்கப்பெற உள்ளது . போட்டி நடைபெறுமிடம் , நாள் , நேரம் , விதிமுறைகள் குறித்து பள்ளிகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் , கல்லூரிகளுக்கு கல்லூரி கல்வி இணை இயக்குநர் வாயிலாகவும் சுற்றறிக்கை அனுப்பி தெரிவிக்கப்படும் . கொரோனா நோய்த்தொற்று தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றியும் , சமூக இடைவெளியுடனும் போட்டிகள் நடத்தப்பெறும் . இப்பேச்சுப் போட்டியில் பங்கேற்று மாணவர்கள் பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.