தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கத்தின் முதலாவது மாவட்ட மாநாடு திருச்சியில் இன்று நடைபெற்றது இந்த மாநாட்டிற்கு மாவட்டத் துணைத் தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார் மாநில செயலாளர் செந்தமிழ் செல்வன் வரவேற்புரை ஆற்றினார். இதில் கவுரவத் தலைவர் பரமேஸ்வரன், செயலாளர் ராமதாசு, தணிக்கையாளர் தௌலத் ஹுசைன்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த முதலாவது மாவட்ட மாநாட்டில் மாநிலத் தலைவர் ராமமூர்த்தி சிறப்புரையாற்றினார். இந்த மாநாட்டின் தீர்மானங்களாக:-
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த கோரியும், நீண்ட காலமாக ஓய்வூதியர்களின் நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கைகள் மீது விரைவு நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண வேண்டியும், பணி ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணி நீக்கம் செய்யக்கூடாது என்ற தமிழக அரசின் ஆணையை முறையாக நடைமுறைப்படுத்திடக் கோரியும், ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ஒரு முறை கட்டணமில்லா மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வழிவகை செய்த தர கோரியும்,
70 வயது மூத்த ஓய்வூதியர்களுக்கு 10% கூடுதல் ஓய்வூதியம் வழங்கிட கோரியும், ஓய்வூதியர்களுக்கு மருத்துவ படி ரூபாய் ஆயிரம் வழங்கிட கோரியும், மூத்த குடிமக்கள் ஓய்வூதியர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.