திருச்சி மன்னார்புரம் பகுதியில் உள்ள ராணுவ மைதானத்தில் வரும் 5ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நம்ம ஊரு மோடி பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளார். இதற்காக பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்ட தலைவர் ஒன்றி முத்து மற்றும் மாநில, மாவட்ட பாஜக நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம். தமிழக பாஜக சார்பாக மாநில தலைவர் நையினார் நாகேந்திரன் தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என பயணத்தை மேற்கொண்டு உள்ளார்.  இதில் வரும் 4 ஆம் தேதி புதுக்கோட்டையில் நிறைவு விழா நடைபெற உள்ளது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பயணம் தமிழ்நாட்டில் நடைபெறுவது என்றாலே அரசியலில் மிகப்பெரிய ஒரு அதிர்வலையை ஏற்படுத்தும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. மேலும் உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த பயணம் தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அகற்றப்படும் என்ற உத்தரவாதத்தை உருவாக்கும் வகையில் இந்த பயணம் அமையும்.

நிறைவு நிகழ்ச்சியை முடித்த பிறகு மறுநாள் காலை திருச்சி மன்னார்புரம் பகுதியில் உள்ள ராணுவ மைதானத்தில் நடைபெற உள்ள தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரமாக இருக்கக்கூடிய உங்கள் பொங்கல் விழாவில் 2000 குடும்பங்கள் பங்கேற்கும் அளவிற்கு ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. நிச்சயம் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி ஆட்சி அமைக்கும் திமுக வீழ்த்தப்படும். நிறைவு விழாவை முடித்த பிறகு திருச்சி திரும்பும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் உயர்மட்ட குழு மற்றும் மையக்குழு நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாட்டின் வெற்றி வாய்ப்புகள் எவ்வாறு உள்ளது தேர்தல் குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை எவ்வாறாக மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளது. மேலும் தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மேற்கொண்டு வரும் பயணம் வரும் 4ஆம் தேதியுடன் முடிவடைகிறது. மேலும் பல்வேறு தொகுதிகளில் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். பாஜகவின் தேர்தல் வியூகம் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை குறித்து திமுக நிர்வாகிகள் மற்றும் தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. தூக்கம் இல்லாமல் தவித்து வருகிறார்கள். பாஜகவின் திட்டங்கள் என்ன தேர்தல் வியூகம் என்ன என்பதை குறித்து ஒவ்வொரு நொடியும் திமுக என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போய் உள்ளது. நிச்சயம் பீகாரின் ஏற்பட்ட சூழ்நிலை தமிழ்நாட்டில் ஏற்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. தமிழ்நாட்டில் திமுக இல்லாமல் போய்விடும்.

பாஜக கூட்டணியில் எந்த விதமான பிரச்சனைகளும் இல்லை, மாறாக திமுக கூட்டணியில் தான் பல்வேறு பிரச்சனைகள் நிலவி வருகிறது. குறிப்பாக ஆட்சி அதிகாரத்தில் பங்கு தொகுதி பங்கீடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உள்ளது. வருகின்ற பொங்கல் திருவிழாவுக்கு பிறகு பாஜக கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இணைய உள்ளார்கள் மிகப்பெரிய கூட்டணியாக தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி அமையும். அதேபோன்று அதிமுக பொதுச்செயலாளர் மேற்கொண்டு வரும் சுற்றுப்பயணம் முடிவடைந்து உடன் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக மிகப்பெரிய மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம். தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு பிரச்சனை தொடர்ந்து நீடித்து வருகிறது மக்கள் ஒவ்வொரு நாளும் அவற்றை சிந்தித்து வருகிறார்கள். இந்நிலையில் மக்களை திசை திருப்ப திமுக அரசு பல்வேறு காரணங்களை கூறி வருகிறது. ஆகையால் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் அதேசமயம் திமுக தமிழ்நாட்டில் இல்லாமல் போய்விடும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *