பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்புக்கு சொந்தமான வங்கி கணக்குகளை அமலாக்க இயக்குனரகம் (ED) தற்காலிகமாக முடக்கியதை பாப்புலர் ஃப்ரண்ட் வன்மையாக கண்டிக்கிறது. அமலாக்கத்துறையின் இந்த சமீபத்திய நடவடிக்கை கடந்த சில ஆண்டுகளாக அமைப்புக்கு எதிராக எடுக்கப்பட்ட அடக்குமுறைகளின் ஒரு பகுதிதான். மக்கள் இயக்கங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மனித உரிமை அமைப்புகள், எதிர்க்கட்சிகள், ஊடகங்கள் மற்றும் நாட்டிலுள்ள ஆளும் கட்சியை விமர்சிக்கும் எந்த ஜனநாயகக் குரல்களை ஒடுக்குவதாக உள்ளது.
பாஜக தலைமையிலான மத்திய அரசின் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையையும், அதிகார துஷ்பிரயோகத்தையும் கண்டிக்க வேண்டும் என்று ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ள நாட்டு மக்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் அழைப்பு விடுத்துள்ளது. இதை கண்டிக்கும் விதமாக தேசிய அளவிலும், மாநில அளவிலும் அதை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சபியுல்லாஹ் தலைமையில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான் வரவேற்றார். நிகழ்ச்சியை பாப்புலர் கொண்டு மாவட்ட செயலாளர் அப்சல் கான் அவர்கள் தொகுத்து வழங்கினார் இந்த ஆர்ப்பாட்டத்தின் கண்டன உரை யாற்றிய பாப்புலர் ஃப்ரண்ட் திருச்சி மண்டல தலைவர் அமீர் பாஷா மற்றும் எஸ்டிபிஐ கட்சியின் திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் முபாரக் அலி திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் மாவட்ட செயலாளர் மௌலானா இனாமுல் ஹஸன் காசிஃபி, திருச்சி அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஹபிபுர் ரஹ்மான், மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியின் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் தமிழாதன் மற்றும் தமிழக மக்கள் தேசிய மக்கள் முன்னணி தோழர் வழக்கறிஞர் கென்னடி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். இறுதியாக திருச்சி மாநகர பகுதி தலைவர் ஜீபேர் நன்றியுரை நிகழ்த்தினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் மதச்சார்பற்ற கட்சிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.