பார்க்கவ குல முன்னேற்ற சங்கத்தின் மத்திய மண்டல நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருச்சி கிழக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் வரவேற்புரை ஆற்றிட மாவட்ட தலைவர்கள் ஜெயச்சந்திரன், செந்தில் குமார் ஆகியோர் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் கணேசன் மூப்பனார், மாநில இணை பொதுச் செயலாளர் அன்பு துரை, மாநில பொருளாளர் செந்தில் குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இந்தக் கூட்டத்தின் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில வழக்கறிஞர் செயலர் ஸ்ரீ சத்தியமூர்த்தி மாநில முதன்மை அமைப்பு செயலாளர் முத்துக்குமார் மற்றும் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பார்க்கவ குல முன்னேற்ற சங்க திருச்சி மத்திய மண்டல நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் மொத்தம் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் பார்க்கவ குல முன்னேற்ற சங்கத்தின் நிறுவனர் டாக்டர் பாரிவேந்தர் அவர்களின் பிறந்தநாளை ஆகஸ்ட் 24 சென்னை ஸ்ரீ வாரி மண்டபத்திலும் மற்றும் இலை வேங்கை பிறந்தநாளை ஜூலை 15 மறைமலைநகர் ஆழ்வார் பேலஸ்ஸிலும் கொண்டாடப்படும் நிகழ்ச்சியில் திருச்சி மத்திய மாநிலத்தின் சார்பாக அதிகப்படியான நபர்கள் கலந்து கொண்டு சிறப்பிப்பது எனவும்,
பார்க்கவகுல மக்களுக்கு கல்வி மற்றும் மருத்துவ சேவைகள் இலவசமாக செய்து கொடுப்பதை தொடரும் என்று அறிவித்த டாக்டர் பாரிவேந்தர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்ளுதல், 2026-ல்நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் லால்குடி, குன்னம் ஆகிய தொகுதிகளில் ஏதாவது ஒரு சட்டமன்ற தொகுதியில் கட்சியின் தலைவர் அவர்கள் போட்டியிட வேண்டும் என்பது உள்ளிட்ட 15 தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது இந்த மத்திய மண்டல கலந்தாய்வு கூட்டத்தில் 300க்கும் மேற்பட்ட பார்கவகுலத்தினர் கலந்து கொண்டனர்.