திருச்சி புத்தூர் நால்ரோடு அருகே தமிழக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பார்வை திறன் குறைபாடு உடைய மகளிருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் மாணவிகள் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் பார்வை குறைபாடுடைய 108 மாணவிகள் பயின்று வருகின்றனர் இந்நிலையில் கடலூர் காட்டூர் மன்னார்குடி பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் மகள் ராஜேஸ்வரி என்கிற பிளஸ் டூ மாணவி படித்து வருகிறார் இந்நிலையில் நேற்று காலை விடுதியில் குளித்துவிட்டு தன்னுடைய அறைக்கு சென்ற மாணவி ராஜேஸ்வரி நீண்ட நேரம் ஆகியும் அறையின் கதவை திறக்கவில்லை இதனால் விடுதி காப்பாளர் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சேலையால் பிளஸ் டூ மாணவி ராஜேஸ்வரி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இது குறித்து அரசு மருத்துவமனை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் அதன் அடிப்படையில் சம்பவ இடம் வந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இந்நிலையில் இறந்த மாணவியின் குடும்பத்தினர் உறவினர்கள் மற்றும் பார்வையற்றோர் சங்கம் சார்பில் மாணவியின் இறப்பில் மர்மம் உள்ளதாக கூறி அரசு தலைமை மருத்துவமனை முன்பு இன்று காலை திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பார்வையற்றோர் சங்கத்தினரை போலீசார் தடுத்த நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.