சென்னை உயர்நீதிமன்றம், தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழு, திருச்சிராப்பள்ளி மாவட்ட நீதித்துறை சார்பில் பாலின உணர்வு மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழித்தல் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி மாவட்ட முதன்மை நீதிபதி எம்.கிறிஸ்டோபர் வரவேற்றுப் பேசினார். விழாவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, திருச்சி மாவட்டத்தின் போர்ட்ஃபோலியோ நீதிபதி வடமலை, சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.விமலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட கலெக்டர் சரவணன், திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் காமினி, திருச்சி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர், செல்வநகரத்தினம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டாக்டர் அனிதா சுமந்த் சட்டம் குறித்த கையேட்டை வெளியிட திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி எம். கிறிஸ்டோபர் பெற்றுக் கொண்டார். அப்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டாக்டர் அனிதா சுமந்த் பேசும்போது, பணியாளர்களுக்கு பல்வேறு வகைகளில் பாலியல் துன்புறுத்தல் நடக்கிறது. பெண்களுக்கு அதிகமாக நடைபெறுகிறது சில பெண்கள் வேலை பறிபோய் விடுமோ என்ற பயத்தில் கண்டு கொள்ளாமல் பெரிது படுத்தாமல் போய்விடு கிறார்கள். ஒரு சில பெண்கள் புகார் தெரிவிக்கிறார்கள். அதிகமாக வேலை செய்யும் பணியிடங்களில் உள் கமிட்டி ஒன்று அமைக்க வேண்டும். அதை உறுதிப்படுத்த வேண்டும்.
மாவட்ட முதன்மை நீதிபதி மேற்பார்வையிட வேண்டும். இதை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முடிவில் திருச்சி தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்,ஏ.பி. நசீர் அலி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் நீதிபதிகள், சார்பு நீதிபதிகள் திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்கத் தலைவர் எஸ்.வி. கணேசன், செயலாளர் முல்லை சுரேஷ், துணைத் தலைவர் வடிவேல்சாமி, இணைச் செயலாளர் விக்னேஷ், திருச்சிராப்பள்ளி குற்றவியல் சங்க தலைவர் முல்லை சுரேஷ், துணை தலைவர் சசிகுமார், செயலாளர் வெங்கட், முன்னாள் அரசு வழக்கறிஞர் ஜெயராமன், புவனேஸ்வரி, மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.