திருச்சி மாவட்டம் பிராட்டியூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்கொடி வயது 61 இவரது கணவர் பரமசிவம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருவரும் திருமணம் முடிந்து குடும்பத்துடன் வெளியூரில் வசித்து வருகின்றனர். இதில் ஜெயக்கொடியான மூதாட்டி பிராட்டியூர் பகுதியில் தனியாக வசித்து பால் வியாபாரம் செய்து தனது பிழைப்பை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் கடந்த 2005ஆம் ஆண்டு தோகமலை சேர்ந்த பிஜேபியை சேர்ந்த நிர்வாகி பரமசிவம் என்பவருக்கு தனது வீட்டின் அருகில் இருந்த காலி மனையை விற்பனை செய்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பிஜேபி பிரமுகரான பரமசிவம் மூதாட்டி ஜெயக்கொடி இடம் அவரது வீட்டை தனது பெயருக்கு எழுதிக் கொடுக்கும்படி கேட்டு பல தொல்லைகள் கொடுத்து வந்துள்ளார். தொடர்ந்து தொந்தரவு கொடுத்த வந்த பரமசிவம் 30 11 2020 ஆம் தேதி ஜெய கொடியை தகாத வார்த்தையால் திட்டி தாக்கிவிட்டு ஜெயக்கொடி இருக்கும் தற்போது வீட்டையும் நீ இறந்து விட்டால் அதையும் எனது பெயரை மாற்றிக் கொள்வேன் என கூறி மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து காவல் நிலையத்தில் மூதாட்டி புகார் அளித்துள்ளார் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மாநகர கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார் அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி இன்று காலை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தார். அப்போது கலெக்டர் அலுவலக வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் நீங்கள் அளிக்க வந்த மனுவை புகார் பெட்டியில் அளித்து விட்டுச் செல்லுங்கள் என கூறியுள்ளனர் அதற்கு மூதாட்டி தான் கலெக்டரை நேரில் சந்தித்து மனு அளிக்க வேண்டும் என கூறி நீண்ட நேரமாக கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருந்தார்.

 

இந்நிலையில் திடீரென மூதாட்டி தான் கொண்டு வந்திருந்த மனு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு ஆகியவற்றை சாலையில் தூக்கி வீசி எரிந்து கதறி அழுத படியே கலெக்டர் அலுவலகம் முன்பு மயங்கி விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அவரை மீட்டு முதலுதவி அளித்து அவரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அழைத்துச்சென்றனர். 60 வயதான மூதாட்டி ஜெயக்கொடி கலெக்டரிடம் மனு அளிக்க வந்து மயங்கி விழுந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *