திருச்சி மாவட்டம், முசிறியில் நாகராஜ் என்பவர் கார்பன்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டின் கொல்லைப்புறத்தில் தோட்ட வேலை செய்து கொண்டிருந்தார் அப்போது அங்கு நட்டு வைக்கப்பட்டிருந்த செடிகள் திடீரென அசைந்து ஆடியது. என்ன என்று அருகே சென்று பார்த்தபோது 6 அடி நீளமுள்ள மஞ்சள் நிறத்தில் சாரைப்பாம்பு பழுப்பு நிறத்தில் மற்றொரு பாம்பும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து இணை சேர்ந்தது. இதனை தனது செல்போனில் படம் எடுத்தார்.
மேலும் இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேரில் வந்து பார்த்து தங்களது செல்போன் மூலம் வீடியோ மற்றும் படம் எடுத்துக் கொண்டனர். மனிதர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்து, வீடியோ, போட்டோ எடுப்பதையும் பொருட்படுத்தாமல் இரு பாம்புகளும் பயமின்றி நீண்டநேரம் பின்னிப்பிணைந்து நடனமாடியது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.