சோதனை என்ற பெயரில் வணிகர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அதிகாரிகளின் நடவடிக்கைகளை தடுக்க கோரியும், கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா என்ற கொடிய போரினால் பாதிக்கப்பட்டு வணிகம் நலிவடைந்து மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வணிகம் நடத்துவதே கேள்விக்குறியாகி உள்ள சூழ்நிலையில், அடிக்கடி அதிகாரிகளால் கடையில் சோதனை என்ற பெயரில் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது என்ற காரணத்துக்காக கடை உரிமையாளர்களிடம் அபராதம் மற்றும் கடையை பூட்டி சீல் வைக்கப்படுகிறது.
இதற்கு அடிப்படையாக அரசால் அனுமதிக்கப்பட்ட 60% விழுக்காடு குறைவாக தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் பை நிலையங்களை பூட்டி சீல் வைக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும், மக்காச்சோளத்தை வைத்து தயாரிக்கப்படும் பைகள் எளிதாக கிடைக்கும் வகையில் வழிவகை செய்ய வேண்டும், அதிகாரிகளின் நெருக்கடி வணிகர்களிடையே மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. எனவே அபராத தொகையை வசூலிப்பதை தவிர்க்கும் பொருட்டு, காலம் தாழ்த்தாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.