புதிய பென்சன் திட்டத்தால் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் போதும், ஓய்வூதியம் பெறும் போதும் அவர்களுக்கான பண பலன்கள் கிடைக்காது எனவே புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும், ரெயில்வே துறையை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது, ரெயில்வே தொழிலாளர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த கூடாது, காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.ஆர்.எம்.யூ தொழிற்சங்கத்தினர் இன்று ஒரு நாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனை முன்பு எஸ்.ஆர்.எம்.யூ ரெயில்வே தொழிற்சங்கத்தினர் அச்சங்கத்தின் துணை பொதுச்செயலாளர் வீரசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.ஆர்.எம்.யூ ரெயில்வே தொழிற்சங்கத்தினர் துணை பொதுச்செயலாளர் வீரசேகரன் பேசுகையில் :-புதிய பென்ச்சன் திட்டத்தால் ஓய்வு பெறும் போது கிடைக்க வேண்டிய பணம் முழுமையாக அவர்களுக்கு கிடைக்காது எனவே அதை ரத்து செய்ய வேண்டும், ரெயில்வேயில் சில துறைகளை தனியாரிடம் ஒப்படைத்து விட்டதால் தொடர்ச்சியாக ரயில் விபத்துக்கள் நடந்து வருகிறது. இதனால் ரெயில்வே தொழிலாளர்களின் பணி இழப்பு மட்டுமின்றி, பொதுமக்களின் பாதுகாப்பும் கேள்விகுறியாகும் நிலை உள்ளது எனவே ஒன்றிய அரசு தனியார்மயத்தை கைவிட வேண்டும் இல்லையென்றால் அகில இந்திய அளவில் ரெயில்வே தொழிலாளர்களை ஒன்றிணைத்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *