இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சி திருச்சி மாவட்ட செயலாளர் திலீப்குமார் ஆட்சியரிடம் அளித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட கிழக்கு சட்டமன்ற தொகுதி சுப்பிரமணியபுரம், டோல்கேட் செல்லும் வழியில் ஒரு கடை மற்றும் கல்லுக்குழி மேம்பாலம் அருகில் சர்வீஸ் ரோட்டில் ஒரு மதுபான கடை என இரண்டு கடைகள் உள்ளது. அந்த ரோட்டில் 100 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும், மாரியம்மன் கோவில், கன்சீஸ் உலூம் அரபி மதரஸா பாடசாலை, மற்றும் பள்ளிவாசல் ஆகியவை அமைந்துள்ளது. அதே பகுதியில் தரைகடை களும் தள்ளு வண்டிகடைகளும் அமைந்துள்ளது,
இந்த கடை இருப்பதனாலேயே அந்த ரோட்டில் எங்களால் சகஜமாக வாழ்க்கை வாழ முடியவில்லை, பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் குடியிருப்புக்கு செல்லும் பெண்கள் வியாபாரப் பொதுமக்கள் யாரும் அந்த வழியாக போய் வர முடியாத சூழ்நிலை இல்லாத போது அதே பகுதியில் டாஸ்மாக் நிர்வாகமும் கலால் ஏசி அவர்கள் புதிய டாஸ்மாக் கடை திறப்பதற்கு வேகமாக வேலை பார்த்து வருகிறார்கள். ஏற்கனவே அந்த இடத்தில் கடை வேண்டாம் என்று இரண்டு வருடங்களுக்கு முன்பு பொதுமக்கள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி இணைந்து போராட்டம் நடத்தி அந்த கடையை வராமல் தடுத்து உள்ளோம் அதேபோல் இப்போது அந்த கடை அதற்கு டாஸ்மாக் நிர்வாகம் ஆர்வம் காட்டி வருவது வன்மையாக கண்டிக்கிறோம். மேலும் பொது மக்களையும் பெண்களின் நலனை கருத்தில் கொண்டு புதிய கடை திறப்பதை தடுக்கக் கோரியும் பழைய கடையை அகற்றக் கோரியும் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க இதன் வாயிலாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம் இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.