அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பாக புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள் சிவசந்திரன், (CRPF) சுப்பிரமணியன் (CRPF) ஆகியோரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை மரியாதை செலுத்தி, அவர்களது குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சத்திற்கான காசோலையினை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை MLA வழங்கினார். அருகில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசர் Ex. MP முன்னிலையில், திருச்சி மாநகர் மாவட்ட தலைவர், கவுன்சிலர் ரெக்ஸ், தெற்கு மாவட்ட தலைவர் கவுன்சிலர் கோவிந்தராஜ், வடக்கு மாவட்ட தலைவர் கலை, முன்னாள் ராணுவத்தினர் அணி மாநிலத் தலைவர் ராஜசேகரன், ஆகியோர் உடன் இருந்தனர்.
நிகழ்வில் மாநிலத் துணைத் தலைவர் சொர்ணா சேதுராமன், மாநில பொருளாளர் ரூபி மனோகரன், மாநில செய்தி தொடர்பாளர் வேலுச்சாமி, அகில இந்திய செயலாளர் கிரிஸ்டோபர் திலக், பாராளுமன்ற பொறுப்பாளர் பெனட் அந்தோணி ராஜ், மாநகர் மாவட்ட பொருளாளர் முரளி, வழக்கறிஞர் சரவணன், கலைப் பிரிவு மாநில தலைவர் பேராசிரியர் பெஞ்சமின் இளங்கோ, பூக்கடை பன்னீர்,
மலைக்கோட்டை கோட்டத் தலைவர் வெங்கடேஷ் காந்தி, ஸ்ரீரங்கம் கோட்டத் தலைவர் ஜெயம் கோபி, திருவானைக்கோவில் கோட்டத் தலைவர் தர்மேஷ் அகில், காட்டூர் கோட்டத் தலைவர் ராஜா டேனியல் ராய், அரியமங்கலம் கோட்டத் தலைவர் அழகர், சுப்ரமணியபுரம் கோட்டத் தலைவர் எட்வின், ஏர்போர்ட் கோட்டத் தலைவர் கனகராஜ், ஜங்ஷன் கோட்டத் தலைவர் பிரியங்கா பட்டேல், மகிளா காங்கிரஸ் சீலாசலஸ், கலைப்பிரிவு அருள், எஸ் சி பிரிவு கலியபெருமாள், இளைஞர் காங்கிரஸ் விஜய் பட்டேல், அமைப்பு சாரா பிரிவு மகேந்திரன், இலக்கியப் பிரிவு பத்மநாபன், சுந்தர், ஜெயப்ரியா மற்றும் பல நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.