பெஞ்சல் புயல் நவம்பர் 30ம் தேதி சனிக்கிழமை நள்ளிரவு புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. விழுப்புரம், புதுச்சேரி பகுதிகளில் வரலாறு காணாத மழை பெய்தது. இதனால், விக்கிரவாண்டி – முண்டியம்பாக்கம் இடையேயான தண்டவாளத்தில் பாலத்துக்கு மேல் வெள்ள நீர் சூழ்ந்தது. ரயில்கள் இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை எழும்பூருக்கு புறப்பட்ட ரயில்கள் விழுப்புரத்திலிருந்து காட்பாடி வழியாக எழும்பூருக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. தென் மாவட்டங்களில் இருந்து சென்னை எழும்பூருக்கு இன்று காலை புறப்பட வேண்டிய பல்லவன், வைகை மற்றும் சோழன், தேஜஸ் மற்றும் சென்னை வந்தே பாரத் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதேபோல், சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய குருவாயூர் விரைவு ரயில், சோழன் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளன. கோவையில் இருந்து தாம்பரம் வரும் ரயில் எண் 06185, சொச்சுவேலில் இருந்து தாம்பரம் வரும் ரயில் எண் 06036, நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் வரும் ரயில் எண் 06012 ஆகிய ரயில்கள் விழுப்புரத்துடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலும் விழுப்புரத்துடன் நிறுத்தப்பட்டு இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்