திருச்சி மாவட்டம், மணப்பாறை ஆணாம்பட்டி பகுதியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருபவர் சுமதி. இவர் அங்கு உள்ள கிராமத்து பெண்களிடம் தனியார் கடன் நிறுவனங்களில் கடன் பெற்று தந்து உள்ளார் அப்போது கொடுக்கப்பட்ட ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றை சுமதி முறைகேடாக பயன்படுத்தி அவர்களுக்கு தெரியாமல் 27 கிராமத்து பெண்கள் பெயரிலேயே சுமார் 35 லட்ச ரூபாய் கடனாக பெற்றதாக கூறப்படுகிறது.

இதற்கு மாதமாதம் தவணைத் தொகை செலுத்தி வந்த சுமதி ஒரு கட்டத்தில் தவணைத் தொகை திரும்ப செலுத்தவில்லை. பாதிக்கப் பட்டவர்கள் இதுகுறித்து சுமதியிடம் கேட்ட போது, தனக்கு நெருக்கடி கொடுத்தால் தற்கொலை செய்து கொள்வேன் எனக்கூறி சுமதி தற்கொலைக்கு முயன்றார். இந்நிலையில் கடன் வழங்கிய நிறுவனங்கள் கடன் வாங்கிய வர்களுக்கு நெருக்கடி கொடுத்தனர். அப்போதுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர்கள் இது குறித்து திருச்சி காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். சுமதி மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்களில் பணிபுரிவோர்கள் இணைந்து விதிமுறைகளை மீறி 62 வயது மூதாட்டி உட்பட 27 பேரிடம் அவகளுக்கு தெரியாமல் கடன் வாங்கி உள்ளனர்.  எனவே எங்கள் பெயரில் கடன் வாங்கிய சுமதி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்