கோவையில் கல்லூரி மாணவிக்கு நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை கண்டித்தும், பெண்களுக்கு பாதுகாப்பு அற்ற மாநிலமாக தமிழகத்தை மாற்றிய திமுக அரசை கண்டித்து திருச்சி மாநகர மற்றும் புறநகர் மகளிர் அணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று நடைபெற்றது.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாஜக திருச்சி மாவட்ட தலைவர் ஒண்டிமுத்து முன்னிலையில். மாநில மகளிர் அணி துணைத்தலைவர் புவனேஸ்வரி, மாநில மகளிர் அணி செயலாளர் ராதா நிரஞ்சனி சிவகங்கை மாவட்டத் துணைத் தலைவர் சுகனேஸ்வரி. ஜெயக்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். மேலும் மாநில, மாவட்ட நிர்வாகிகள்,அணி, பிரிவு, மண்டல் நிர்வாகிகள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
