திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ பேசியது : தமிழ்நாடு பள்ளிகல்விதுறை அமைச்சர் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மேலும், 500அரசு பள்ளிகளை தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சி நடைபெறுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. ஆனால் எதிர் கட்சிகள் , உள்ளிட்ட அனைவரும் தவறாக புரிந்துகொண்டு பேசுகிறார்கள். தமிழ்நாடு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியது.. 500 அரசு பள்ளிகளில் இருக்கும் அடிப்படை , கட்டமைப்பு மேம்படுத்த தனியார் பள்ளிகளுடன் இணைந்து செயல்படுவோம் என்று தான் கூறினார். ஒன்றிய அரசிடம் , அமைச்சர் அன்பில் மகேஷ் , மற்றும் அதிகாரிகள் பிச்சை எடுப்பது போல் நிதியை கேட்டார்கள். ஆனால் ஒன்றிய அமைச்சர் தேசிய கல்விகொள்கை ஏன் ஏற்க முடியாது என்று சொல்லுகிறீர்கள் என கேட்டார். தமிழ்நாட்டை பொறுத்தவரை இருமொழி கொள்கை தான் என்று கூறினோம். ஆனால் மூன்றாவது மொழியாக இந்தி, சமஸ்கிருதம் இருக்க வேண்டும் என சொல்வது ஏன் என்றார். புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே நிதியை முழுமையாக வழங்க முடியும் என தெரிவித்து வருகிறார்கள். தமிழ்நாட்டிற்கு மத்திய அரசிடம் இருந்து கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியை முறையாக வழங்கவில்லை என குற்றம்சாட்டினார்.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ஓடுதளம் விரிவாக்கம் பணிகள் 97% முடிந்து விட்டது. இன்னும் 6 மாதத்திற்கு பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்னுடைய ஆசை என்றார். அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ , பொங்கள் சிறப்பு தொகுப்பாக மக்களுக்கு ரூபாய் 30 ஆயிரம் கொடுக்க வேண்டும் என கூறியிருக்கிறார் என்ற கேள்வி ?? செல்லூர் ராஜூ கூறியது ஆங்கில புத்தாண்டு ஜோக் ஆகும். இதனை பற்றி பேச தேவையில்லை. பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசுவதற்கு பாஜகவுக்கு எந்த அருகதையும் கிடையாது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கும் மாநிலம் உத்திரபிரதேசம் ஆகும். அதேபோல் டெல்லியில் சட்டம் ஒழுங்கு, பாஜக கையில் உள்ளது, ஆனால் தலைநகரில் எந்த பாதுகாப்பும் இல்லை. குறிப்பாக வாரத்துக்கு ஒரு துப்பாக்கி சூடு நடைபெற்ற வருகிறது, தலைநகரத்திலே மக்களுக்கு பாதுகாப்பில்லை என்றார். அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நடந்த பாலியல் தொந்தரவு, இனிவரும் காலங்களில் நடக்காமல் மாநில அரசு நடவடிக்கை தீவிர படுத்த வேண்டும். மாணவி பாலியல் புகாரில் சம்பந்தப் பட்டவர்களை உடனடியாக கைது செய்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது மாநில அரசு. மாணவி பாலியல் புகாரில் திமுக நிர்வாகிகள் சம்பந்தப்பட்டதாக பொய்யான குற்றச்சாட்டுகளை பாஜக அண்ணாமலை எழுப்பி வருகிறார் இது முற்றிலும் தவறானது.