திருச்சி அரசுமருத்துவமனை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கொடாப்பு பிள்ளையாார் கோயில் அருகில் நடைபயிற்சி மேற்க்கொண்ட பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்து கத்தியை காண்பித்து கழுத்தில் அணிந்திருந்த தங்கசெயினை பறித்து சென்றவர்களை பொதுமக்கள் உதவியுடன் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் , அதனைத் தொடர்ந்து பெறப்பட்ட புகாரையடுத்து , வழக்குப்பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது .
இவ்வழக்கின் புலன் விசாரணையை முடித்து எதிரிகள் அசன் சாகுல் ஹமீது மற்றும் அப்துல் ஹக்கிம் ஆகியோர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது . மேற்படி வழக்கில் திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதி சாந்தி விசாரணையை முடித்து 16 – ம்தேதி , மேற்படி இரண்டு குற்றவாளிகளுக்கும் ச / பி 392 r / w 397 இதச ன்படி 7 ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும் ரூ .5,000 / – அபராதமும் ( அபராதம் கட்ட தவறினால் 6 மாதம் சிறை ) தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினார் . இவ்வழக்கில் அரசு வழக்கறிஞர்.ஹேமநாத் ஆஜரானார்கள் . இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து , குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்த அரசு மருத்துவமனை காவல் ஆய்வாளர் மற்றும் காவல் ஆளிநர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் பாரட்டினார்.