பகுத்தறிவு பகலவன், பெண் உரிமை போராளி, சுயமரியாதை சுடர் ஒளி, தந்தை பெரியார் அவர்களின் 145வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு திமுக கழக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அருகில் மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி மேயர் அன்பழகன் மற்றும் மாவட்ட கழக.மாநகர கழக நிர்வாகிகள் தலைமைசெயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி கழக வட்டக்கழக நிர்வாகிகள், மாவட்டபிரதிநிதிகள் .மாமன்ற உறுப்பினர் கள், அனைத்து அணியை சேர்ந்த நிர்வாகி கள், செயல்வீரர்கள் கழகமூத்த முன்னோடிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்.
