பேரறிஞர் அண்ணா அவர்களின் 115வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக கழக முதன்மைச் செயலாளரும், தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே என் நேரு மற்றும் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், தமிழக பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் தலைமையில் திருச்சி சிந்தாமணி பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் மேயர் அன்பழகன், துணை மேயர் திவ்யா, முன்னாள் எம்எல்ஏக்கள் அன்பில் பெரியசாமி, கே என் சேகரன் மற்றும் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு:-

இன்று அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இவனைத் தொடர்ந்து திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், நானும் இணைந்து கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை மகளிர்களுக்கு வழங்க உள்ளோம்.

இதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறக்கூடிய நிகழ்ச்சியில் பள்ளிகளை துறை அமைச்சர் கலந்து கொள்கிறார் அதே போன்று ,சேலத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளோம். தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை சோதனை குறித்த எழுப்பிய கேள்விக்கு, பதில் அளித்த அவர், இந்த நேரத்தில் இதைப்பற்றி பேச வேண்டாம் என தெரிவித்தார். மயிலாடுதுறை சீர்காழியில் உள்ள அருள்மிகு சட்டநாதர் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்து உள்ளீர்கள் என்ன வேண்டுதல் என்று செய்தியாளர் எழுதிய கேள்விக்கு பதில் அளித்த அவர், இன்னும் எத்தனை ஆண்டு காலம் ஆனாலும் தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி பொறுப்பில் இருக்க வேண்டும். தொடர்ந்து மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *