பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மத்திய மாவட்ட திமுக சார்பில் கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு வழிகாட்டுதலின்படி, பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு தலைமையில் ஏராளமான திமுகவினர் ஒன்று திரண்டு சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் உள்ள கலைஞர் மற்றும் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அனைத்து மரியாதை செலுத்திய பின் கழகத்தின் இரு வண்ணக் கொடியை ஏற்றினர்.
பின்னர் தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன்” என்ற தலைப்பில் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்துள்ள உறுப்பினர்களை ஒன்றிணைத்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.