பேரறிவாளன் விடுதலையை கண்டித்து திருச்சி அருணாசலம் மன்றத்தில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு தலைமையில் காங்கிரஸார் வாயில் வெள்ளை துணி கட்டி மௌன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து எம்பி திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்:-
பேரறிவாளன் தவிர்த்த மற்ற ஆறு பேர் விடுதலையை, மத்திய, மாநில அரசுகள் தடுக்க வேண்டும். உச்சநீதிமன்றம் தனக்குள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, பேரறிவாளனை விடுவித்துள்ளது. அவர் குற்றமற்றர் என்றோ, நிரபராதி என்றோ விடுதலை செய்யவில்லை. சட்டத்தின்படி இது சரியென்றாலும் தர்மத்தின் படி தவறு.
அதைவிட, பேரறிவாளன் விடுதலையை ஒரு சுதந்திரப் போராட்ட தியாகியின் விடுதலையை போல வெடி வெடித்து கொண்டாடுவது ஏற்புடையதல்ல. இதை கண்டு காங்கிரஸ் தொண்டர்கள் கொதிப் படைந்துள்ளனர். இதை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது என தெரிவித்தார்.இந்த மௌன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் ஜவஹர் முன்னாள் மேயர் சுஜாதா, முன்னாள் மாவட்ட தலைவர்கள் ஜெரோம் ஆரோக்கிய ராஜ், தொட்டியம் சரவணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.