கோயிலை காப்போம் கோயில் உரிமையை மீட்போம் என்ற முழக்கத்தோடு திருச்சி மாநகரில் ஆன்மீக அமைப்புகளை ஒன்றிணைக்கும் ஆன்மிக விழா திருச்சி திருவானைக் காவல் விபூதி பிரகாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சுமங்கலி மஹாலில் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்டு, கோயில் சொத்துக்கள் பாதுகாப்பது குறித்த தலைப்பில் ஓய்வுபெற்ற காவல்துறை I.G.பொன்.மாணிக்கவேல் பங்கேற்று சிறப்புரையாற்றினார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறியதாவது. அறநிலையத்துறை நிர்வாக பணிகளை மட்டுமே செய்யவேண்டும், பறிபோன சிலைகளை மீட்காமல் சப்பைகட்டு கட்டுவதுபோல ஆறாயிரம் கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்தோம் என கூறுவது ஏற்கத்தக்கது அல்ல. தமிழகத்தில் தனது நிர்வாகத்தில் சிறப்பான முறையில் பணியாற்றி, தற்போது தொல்லியல்துறையில் உள்ள உதயச்சந்திரன் தற்போதும் தனது திறமையை காட்ட வேண்டும். அந்த காலத்தில் கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வழிபாட்டுக்காகவே உற்சவர் வீதி உலா நடைபெற்றது, அந்த விக்கிரகங்கள் அனைத்தும் முகலாயர்கள் படையெடுப்பின் போது பூமிக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது.
லண்டன் விக்டோரியா ஆல்பர்ட் மியூசியத்தில் கொள்ளையடிக்கப்பட்ட தெய்வம் விக்ரகங்கள் வைக்கப்பட்டு உள்ளது, தற்போது தமிழகத்தில் அதிகாரத்தில் உள்ளவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் தான். 1414 விக்ரகங்கள் சுபாஷ் கபூரால் கொள்ளையடிக்கப்பட்டு வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த கொள்ளையில் ஈடுபட்ட கட்சியினரை குறிப்பிடுவதால் நான் ஒரு கட்சிக்கு மட்டும் சார்ந்தவன் அல்ல. 3லட்சத்தது 50 ஆயிரம் தெய்வ விக்கிரகங்களை பதிவு செய்யுங்கள் என முதல்வர் ஸ்டாலினிடம் தெரிவித்தும் அதனை கண்டு கொள்ளவில்லை, அதேபோன்று முதன்மைச் செயலாளரிடம் சிவதாஸ் மீனாவிடம் தெரிவித்தும் காதையும், கண்ணையும் பொத்திக்கொண்டுள்ள அவர் எதற்கு உயிர்வாழ வேண்டும். இதற்கு எல்லாம் நீதிமன்றம் மட்டும்தான் தீர்வா, அப்படி என்றால் அரசு எதற்கு? மியூசியத்தில் உள்ள சுவாமி விக்கிரகங்களை கோவிலில் வைக்கவேண்டும், கோவிலை விட்டு படிப்படியாக செல்வேன் என அறநிலையத்துறை சொல்வது என்பது சாராயக்கடையா இது, படிப்படியாக அமல்படுத்துவேன் என கூறுவதற்கு, தெய்வ விக்கிரகங்களை காட்சிபொருளாக வைத்து அறநிலையத்துறை கேவலப்படுத்த வேண்டாம். நேற்றைய தினம் போலீஸ் பட்ஜெட்டில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளதை கேட்பதற்கு அவமானமாக உள்ளது, இதை எதிரில் உள்ளவர்கள் கேட்டு அமைதியாக இருப்பது என்பது வெட்கத்திற்கு உரியது.
கள்ளச்சாராயம் டாஸ்மாக் குடித்துவிட்டு இறந்தவர்களை மார்ச்சுவரியில் வைத்து அவர்களுக்கு தல 10 லட்சம் கொடுக்கிறது இந்த அரசு, எனவே தமிழகம் என்பதை எடுத்துவிட்டு தமிழ் மார்ச்சுவரி என பேரை மாற்றிக் கொள்ளலாம், தமிழக அரசிடம் சிலைகளை மீட்ககோரி மனு அளித்த பிறகும் தமிழக அரசு செத்த பூனை போல உள்ளது ஸ்டாலின் முகத்தை நான் பார்த்ததுகூட இல்லை, தமிழகத்தில் பல கோவில்கள் சிதிலமடைந்து உள்ள நிலையில் அறநிலையத்துறையின் கீழ் மற்றும் முதல்வரின் கையில் பல கோடி ரூபாய் உள்ளது, இது ஸ்டாலின் பணமோ, கருணாநிதி பணமோ இல்லை தனியார் பலர் கொடுத்த பணம் மற்றும் கோவில் வளர்ச்சிக்கு மற்றும் புணரமைப்புக்கு என பல கோடி உள்ளது, கோடிக்கணக்கான பணம் கையிறுப்பில் இருந்தாலும் அதனைக் கொன்டு சிதிலமடைந்த ஆலயங்களை சீரமைக்க அரசு முன் வராததால் ரத்தக்கண்ணீர் வடிக்கின்றோம், நீதிமன்றத்தில் இதுவரையிலும் வழக்கு கொடுத்தும் 150 ஆர்டர்கள் வந்து ஒன்னும் பிரயோஜனம் இல்லை, அரசு இதுவரையிலும் செயல்படுத்தவில்லை. மாறாக அறநிலையத் துறையை ஆட்டி படைக்கும் கமிஷனர் சர்வாதிகாரராக உள்ளார், இதுவரையிலும் 34 ஆயிரத்து 119 கோயில்கள் அழிக்கப்பட்டுள்ளது. 2012ல் – நாடு முழுவதும் இருந்து 2622 தெய்வ விக்கிரகங்கள் திருடப் பட்டுள்ளது, மத்திய அரசை எதிர்த்து போராடி சிலைகளை மீட்டு வரவேண்டிய தமிழக முதல்வரோ தற்போது வரை மௌனம் சாதித்து வருகிறார் என்றும் தெரிவித்தார்.