இரயில்வே தொழிலாளா்களின் பாதுகாவலா் எஸ்ஆர்எம்யு தலைவர் Dr.கண்ணையா அவா்களின் விடாமுயற்சியின் பயனாக ஆயுதபூஜை விடுமுறைக்கு முன்னதாக AIRF பொது செயலாளா் மிஷ்ரா அவா்களின் தொடா்அழுத்தத்தின் பயனாக பெறப்பட்ட உத்தரவின் படி ராஜாஶ்ரீதா் ZP/SRMU அவா்கள் மற்றும் ஈஷ்வா்லால் AGS/N/SRMU அவா்கள் வழியில் செயல்படும் எஸ்ஆர்எம்யு துணை பொதுச் செயலாளர் வீரசேகரன் அவர்களால் போனஸ் அறிவிப்பு வந்த அன்றே பொன்மலை, மற்றும் திருச்சிக்கு ஒரேநாளில் வங்கி கணக்கில் போனஸ்தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது..
குறிப்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை ஆனாலும் காந்திஜெயந்தி என்றாலும் NET BANKING என்ற சூத்திரத்தை கையிலெடுத்து நிர்வாகத்திடம் தொடர்ந்துபேசி இன்று போனஸ் தொகை அனைவருக்கும் பட்டுவாடா செய்யப்பட்டது.தென்னக ரயில்வே மட்டுமல்ல, இந்திய ரயில்வேயிலேயே போனஸ் பெற்ற முதல் இடமாக திருச்சிக்கோட்டம் பொன்மலை பனிமலை கோட்டம் வந்ததற்கு SRMU பேரியக்க தலைவர்களுக்கும், மற்றும் அனைத்து நிர்வாகிகளுக்கும் தொழிலாளர்களின் நன்றியோடு கூடிய வணக்கத்தை தெரிவித்துக் கொண்டனர்..
“எதையும் இன்றே செய்வோம்” “அதையும் நன்றே செய்வோம்”என்ற வாக்கினை என்றும் மெய்பிக்கும் எஸ்ஆர்எம்யு துணை பொதுச் செயலாளர் வீரசேகரன் அவர்களுக்கும், இதற்கு உறுதுணையாக இருந்த மதிப்பிற்குரிய DRM/TPJ அவர்களுக்கும், மதிப்பிற்குரிய ADRM/TPJ அவர்களுக்கும், மதிப்பிற்குரிய SR.DPO/TPJ அவர்களுக்கும், மதிப்பிற்குறிய SR.DFM/TPJ அவர்களுக்கும் மதிப்பிற்குறிய CWM/GOC அவா்களுக்கும், மதிப்பிற்குறிய Dr.உமா மகேஸ்வரி Dy.FA& CAO/GOC அவா்களுக்கும்,மதிப்பிற்குறிய WPO/GOC அவா்களுக்கும், மற்றும் அனைத்து அதிகாாிகளுக்கும் எஸ்ஆர்எம்யு உறுப்பினர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.