போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற தலைப்பில் மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி சென்னை நந்தனம் அரசு கலை கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு அவரது தலைமையில் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழி மாணவ மாணவிகள் ஒன்று சேர்ந்து எடுத்துக் எடுத்துக்கொண்டனர். இந்த உறுதிமொழியானது காணொளி வாயிலாக அனைத்து மாவட்டங்களிலும் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் திருவரம்பூர் எம் ஐ டி பொரியல் கல்லூரியில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு மாநில அளவிலான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு தொடர்பாக நடைபெற்ற பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
இந்த நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் மாநகர காவல் துறை ஆணையர் காமினி உதவி ஆணையர் உதயகுமார் மண்டல தலைவர் மதிவாணன் கல்லூரி பேராசிரியர்கள் பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவ மாணவிகள் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்