மகாத்மா காந்தியின் 157-வது பிறந்தநாள் விழா மற்றும் காமராஜரின் 47-வது நினைவு நாளையொட்டி கழக முதன்மை செயலாளரும்,நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சி தபால் நிலையம் அருகிலுள்ள தேசப்பிதா மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனை தொடர்ந்து திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கல்வி கண் திறந்த காமராஜரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பின்னர் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன்,மாநகராட்சி மேயர் அன்பழகன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின்குமார், உள்ளிட்ட மாமன்ற உறுப்பினர்கள், மண்டல தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர் பங்கேற்றனர்.