திருச்சி மாநகராட்சி 56 வது வார்டு திமுக வேட்பாளர் மஞ்சுளாதேவி பாலசுப்ரமணியன் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தார். அப்போது மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் மக்களின் குரலாக ஒலித்து மக்களுக்காக பாடுபடுவேன் என உறுதியளித்தார்.
திருச்சி மாநகராட்சி 56-வது வார்டு திமுக கட்சி சார்பில் போட்டியிடும் மஞ்சுளாதேவி பாலசுப்ரமணியன் ராம்ஜி நகர் பகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டார் அப்போது பெண்கள் வழிநெடுகிலும் நின்று அவரை உற்சாகமாக ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
திருச்சி ராம்ஜி நகர் பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சாரத்தின் போது 56 வது வார்டு திமுக வேட்பாளர் மஞ்சுளாதேவி பாலசுப்ரமணியன் பேசுகையில்:- கடந்த அதிமுக ஆட்சியில் இந்த வார்டு மக்களின் எந்த ஒரு அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை இந்தப் பகுதியில் நான் வெற்றி பெற்றால் மக்களின் குரலாக மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் செயல்படுவேன் மேலும் மக்களின் தேவைகளை நிறைவேற்ற பாடுபடுவேன்.
குறிப்பாக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருக்கும் கே என் நேரு ஆகியோர் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்வார்கள் 56 வது வார்டில் வளர்ச்சி திட்டங்கள் தொடர அனைத்து நலத்திட்டங்களும் கிடைத்திட முன்மாதிரியாக மாற்றிட திமுக வேட்பாளர் ஆகிய எனக்கு ஆதரவு தாருங்கள் திருச்சி மாநகரை வளர்ச்சி பாதையில் செல்ல உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டுப்போடுங்கள் என கேட்டுக்கொண்டார்.