மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ராஜூ திருச்சி பத்திரிக்கை யாளர்களுக்கு பேட்டி அளிக்கையில்:-
தமிழகத்தில் அமைதியை கெடுக்கும் ஆளுநர் ஆர்.ன். ரவியை ஒன்றிய அரசு திரும்ப பெறவேண்டும், ஜனநாயக விரோத ஆளுநர் பதவியை உடனே ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி மே 17 தேதி கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டமும், தருமபுர ஆதின விவகாரம் தொடர்பாக மனிதனை மனிதன் சுமப்பது மனித உரிமை மீறல் மதவிவகாரம் அல்ல எனவே பல்லாக்கு நிகழ்வை உடனே தடை செய்ய வேண்டும் என மே 22 தேதி மயிலாடுதுறையில் போராட்டம் நடத்த உள்ளோம் என தெரிவித்தார். பட்டின பிரவேச நிகழ்ச்சியை பொருத்தவரை மனிதனை மனிதன் தூக்குவது எந்த அளவிற்கு அறிவுடைமை நிறைந்த செயல் என்று கேள்வி எழுப்பினார்.
இந்த பேட்டியின் போது மாநில பொருளாளார் காளியப்பன், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பொதுச் செயலாளர் பாடகர் கோவன் மற்றும் ம.க.இ.க கலைக்குழுவினர், மக்கள் அதிகாரம்,மக்கள் கலை இலக்கியக் கழகம், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் உடன் இருந்தனர்.