மக்கள் அதிகாரம் சார்பில் திருச்சி ரயில்வே ஜங்ஷன் ரவுண்டானா வழிவிடு முருகன் கோவில் அருகே தமிழகத்தில் கடந்த மே 22-ம் தேதி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளின் ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி மக்கள் அதிகாரம் மாநில துணைச் செயலாளர் செழியன் தலைமையில் இன்று நடைபெற்றது.
பொதுநல அமைப்புகள் சார்பாக விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் அய்யா சின்னத்துரை மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாவட்ட செயலாளர் ஜீவா, மைய கலை குழு பொறுப்பாளர் லதா,விடுதலை சிறுத்தை கட்சியின் தில்லைநகர் பகுதி செயலாளர் முரசு மக்கள் உரிமை கூட்டணி ஜோசப் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்)கட்சி மாவட்ட செயலாளர் தேசிகன்புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மாவட்டத் தலைவர் கோபிநாத்,மக்கள் உரிமை மீட்பு இயக்கம் நிறுவனர் பஷீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.அதனைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட தியாகிகளின் படத்திற்கு மலர் தூவி மெழுகுவர்த்தியேந்தி அஞ்சலி செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து சொந்த நாட்டு மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய போலீசாரை கைது செய்யக்கோரியும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.