முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருந்தார். அதன்படி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருகுவளையில் இத்திட்டத்தை இன்று துவக்கி வைத்தார்.இதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு 195 பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு உணவுகளை வழங்கினார்..

இந்நிலையில் திருச்சி மாநகராட்சியில் உள்ள 40 அரசு பள்ளிகளில் பயிலும் 1 முதல் 5 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை 8 மணிக்குள் உணவு சென்றடைய வசதிகள் செய்யபட்டுள்ளது. இந்த திட்டத்தினால் திருச்சியில் சுமார் 2,563 பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெறு வருகிறார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று முதல் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப் பட்டுள்ளது தொடர்ந்து திருச்சி மாநகரில் உள்ள 35 பள்ளிகளில் பயிலும் 6,193 மாணவ, மாணவிகள் பயன் அடைவார்கள் என தெரிவித்தனர். இதனால் மொத்தம் திருச்சி மாவட்டத்தில் 75 பள்ளிகளில் பயிலும் 8,756 மாணவ மாணவிகள் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார்,ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, மணிகண்டம் ஒன்றிய செயலாளர் மாத்தூர் கருப்பையா, உதவி இயக்குனர் ஊராட்சிகள் கங்காதரணி , மற்றும் அரசு அலுவலர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *