மேகதாது அணைகட்ட ரூ.1000 கோடி நிதி ஒதுக்கிய கர்நாடக அரசை கண்டித்தும், ஆற்றில் மணல் எடுப்பதையும், குவாரிகள் அமைப்பதையும் தடுக்க கோரியும், சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனடியாக வழங்க கோரியும், தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியாக நெல்லுக்கு 1 குவிண்டாலுக்கு ரூ.2500/-மும், கரும்பு ஒன்றுக்கு ரூ.4000/-மும்,
இதர பயிர்களுக்கு அறிவித்தபடி கொடுக்க வேண்டும் என்றும், அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் 40கிலோ நெல்லுக்கு ரூ.35 முதல் ரூ.60 வரை லஞ்சம் பெறுவதை தடுக்க கோரியும், தேங்காய்-க்கு குறைத்த பட்ச விலையை நிர்ணயிக்க வேண்டும், வேளாண் கூட்டுறவு சங்கம் அறிவித்த Scale of Finance-படி அனைத்து பயிர்களுக்கும் கடன் கொடுக்க வேண்டும், 60 வயதடைந்த அனைத்து விவசாயிகளுக்கும் மாதம் ரூ.5000/- வழங்க வேண்டும், விவசாய விளைப்பொருட்களுக்கு பாரத பிரதமர் அறிவித்தபடி இரண்டு மடங்கு விலையை தர வேண்டும்,
அதுவரை விவசாயிகள் விவசாயத்திற்கு வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும், வங்கியில் விவசாயிகள் வாங்கிய கடன்களுக்கு ஜப்தி செய்வதை தடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..