இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரம்ஜான் பண்டிகை இன்று உலகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். ஏழ்மையை அறிந்துகொள்ளவும், பசியின் கொடுமையை உணர்ந்து கொள்ளவும், உடல் நலத்தை பேணிக்காத்து மனிதர்களை மேம்படுத்துவதுதான் இந்தப் புனித ரமலான் நோன்பின் சிறப்பாகும். இந்நிலையில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை காரணமாக தற்போது தமிழக அரசு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது அதனால் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகையை தங்கள் வீட்டிலேயே குடும்பத்தாருடன் கொண்டாடி வருகின்றனர்.
திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் தங்கள் வீட்டின் அருகே வசிக்கும் பிற மதத்தினருடன் இணைந்து இனிப்புகள் ஊட்டி மதநல்லிணக்க ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினர்.