கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்க அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் 27 மாவட்டங்களில் தொற்று குறைந்துள்ளதால் டாஸ்மாக் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்த நிலையில் திருச்சி மாவட்டத்தில் இன்று அரசு மதுபான கடைகள் 35 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டது. தமிழக அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளின் படி மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. முககவசம் அணிந்து வந்தவர்களுக்கு மட்டுமே மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு நபருக்கு 2 பாட்டில்கள் மட்டுமே வழங்கப்படுகிறது.மேலும் சானிடைசர்களால் கைகளை சுத்தப்படுத்திய பின்னர் மதுபானம் வழங்கப்படுகிறது. வழக்கமாக 2 பணியாளர் உள்ள நிலையில் கூடுதலாக 3 பேர் என ஒரு கடைக்கு 5 பேர் பணியாற்றி வருகிறார்கள்.