மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில அளவில் சக பயணிகளின் சங்கமம் மற்றும் ஆலோசனை கூட்டம் திருச்சி அருண் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மக்கள் சக்தி இயக்க மாநில பொதுச் செயலாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் டாக்டர் ராசலிங்கம், மாநில துணைத்தலைவர் ஈரோடு கோவிந்தராஜ், சென்னை ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளர் திருச்சி கே.சி. நீலமேகம் அனைவரையும் வரவேற்று பேசினார்.

ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்;-

அத்திக்கடவு – அவிநாசி திட்டத்திற்க்காக 1993 முதல் பாதயாத்திரை, பொதுக் கூட்டம், கையெழுத்து இயக்கம் போன்ற விழிப்புணர்வுகளை மக்களிடம், அரசாங்களிடம் எடுத்துரைத்த டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியிற்கும், அதனை தொடர்ந்து குரல் கொடுத்து வந்த வெற்றி கண்ட கொங்கு மண்டல விவசாய சங்கம், மக்கள் சக்தி இயக்க நிர்வாகிகளுக்கு மக்கள் சக்தி இயக்கம் பாராட்டுகிறது. தமிழக அரசு உடனே மக்களை பாதிக்கும் மது விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை நடைமுறைப்படுத்த வேண்டும் என மக்கள் சக்தி இயக்கம் கேட்டுக் கொள்கிறது. காவேரி – குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கி, விரைந்து விரிவுப்படுத்த வேண்டும் என மக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *