திருச்சி பீமநகர் பகுதியில் “உங்களுடன் ஸ்டாலின்” நடைபெற்றது. அங்கு வந்து நேரடியாக ஆய்வு செய்து மக்களிடம் குறைகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்… புதுக்கோட்டையில் எதிர்க்கட்சித் தலைவர் உருட்டுகளும் திருட்டுகளும் என்று தன்னுடைய பரப்புரை துவக்கி உள்ளளார். அவர்கள் 10 ஆண்டுகளில் உருட்டு திருட்டுகள் செய்திருப்பதை கூறி இருப்பார். ஐந்து ஆண்டுகாலம் ஆட்சி செய்ய மக்கள் எங்களுக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்கள். மக்கள் ஆதரவு எங்களுக்கு இருக்கிறது.
முதல்வரின் திட்டத்திற்கு மக்களின் அளிக்கும் ஆதரவு அவர்களால் தாங்க முடியவில்லை. உறுப்பினர் சேர்க்கைக்கு கோர்ட்டுக்கு போகிறார்கள். உறுப்பினர் சேர்க்கையை கூட அவர்களால் தாங்க முடியவில்லை. மக்கள் ஆதரவு அதிகமாக இருக்கும் போது தாங்க முடியமால் பேசுகிறார்கள். அவர்கள் காலத்தில் மக்களுக்கு செய்ய வேண்டியதை செய்யவில்லை. மக்கள் கொடுத்த ஐந்து ஆண்டுகளில் தொடர்ந்து முதல்வர் பணிகளை செய்து கொண்டு சொல்வது செய்து கொண்டிருக்கிறார். அதிமுகவினர் வீடு வீடாக சென்று ரிப்போர்ட் கார்டு கொடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு ரிப்போர்ட் கார்டை கொடுக்க சொல்லுங்கள் நாங்கள் பதில் சொல்கிறோம் என்றார்.
தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமரை சந்தித்து கோரிக்கைகள் வைப்பீர்களா என்கிற கேள்விக்கு பிரதமரை வரவேற்க வழியனுப்ப தலைவர் எங்களை அனுப்பி உள்ளார். முதல்வர் தினமும் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நிதி குறித்து தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறார். ஜல்ஜீவன், 100 நாள் திட்டம், பள்ளி கல்வித்துறைக்கு பணம் வரவில்லை என வார வாரம் கடிதம் எழுதிக் கொண்டே இருக்கிறார் என்றார். இந்த நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன், மேயர் அன்பழகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.