தேதிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட செயலாளர் உமாகாந்த் தலைமையில் மாநில அலுவலத்தில் இன்று நடைபெற்றது. இதில் மாநில துணைத் தலைவர்கள் மேகராஜ், தெந்தல் குமார் பரமசிலவம், ஆண்டவர் மதி, ராஜசுலோசனா, நீலாவதி ஆகியோர்கள் முன்னிலை வகித்தார்கள். இக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தீர்மானங்கள் குறித்து விளக்கிப் பேசினார். அதன்படி மழைகாலங்களில் 25% ஈரப்பதம் உள்ள நெல்லையும் மத்திய அரசு D.P.C மூலமாக கொள்முதல் செய்வதுடன் மாண்புமிகு மோடி ஐயா கூறியது போல 1கிலோ நெல்லுக்கு ரூ.54/- தரவேண்டுமென்று மத்திய அரசை கண்டித்து நவம்பர் மாதம் டெல்லியில் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பது என்று ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.

D.P.C யில் கொள்முதல் செய்யும் 40கிலோ நெல்லிற்கு கூலியாக ரூ.10/-கொடுப்பதை ரூ.20/- தருவதுடன் விவசாயிடம் 40 கிலோ நெல் முட்டைக்கு ரூ.80/- லஞ்சம் கேட்காமல் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். காவிரி ஆற்றில் ஆயிரக்கணக்கான கனஅடி வெள்ளநீர் வீணாக கடலில் சென்று கலக்கிறது. அதில் 2000 கன அடி நீரை காவிரி அய்யாறு இணைப்பு கால்வாய் மேட்டூரில் இருந்து வெட்டி திருப்பி விட்டால் சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் 5லட்சம் புஞ்சை நிலங்கள் நஞ்சை நிலமாகும். ஆயிரக்கணக்கான ஏரி குளங்கள் நிரம்பி 1000 அடிக்கு கீழ் உள்ள நிலத்தடி நீர் மட்டம்20 அடிக்கு வரவாய்ப்புள்ளது. உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *