மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும், மழையினால் அழிந்து வரும் 10 இலட்சம் நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும், உத்திர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம் திகுன்னியா அருகில் பன்வீர்பூர்-ரில் விவசாயிகளை கொன்றவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் கடந்த 12.10.2021 முதல் 26.11.2021 வரை 46 நாட்கள் உண்ணாவிரதம் போராட்டங்களை நடத்தி வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக 15-ம் நாளான இன்று மத்திய மோடி அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்க வில்லை என கூறி நூதன முறையில் இறந்த விவசாயியை வைத்து சங்கு ஊதி, மணி அடித்து, ஒப்பாரி வைத்து நூதன உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினர்.