தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு உரிய விலை தர வேண்டும், விவசாய வாங்கிய வங்கி கடன் தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாய வாங்கிய கடன்களை அடைக்க முடியாமல் தவிக்கும் விவசாயிகள் வீடுகளில் வங்கி பணியாளர்கள் புகுந்து அடவாடித்தனமாக பொருட்களை பறிமுதல் செய்வதை அரசு கட்டுப்படுத்த வேண்டும், கர்நாடக அரசு காவிரியில் உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும், மேகதாட்டானையை கட்டுவதை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி

கடந்த 18நாட்களாக பல்வேறு நூதன முறையில் போராட்டங்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 19ஆம் நாளான சுதந்திர தினமான இன்று நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்தாலும் விவசாயிகளுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை என்பதை வலியுறுத்தும் வகையில் தலையில் முக்காடிட்டு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த ஸ்ரீரங்கம் சரக காவல்துறை ஆணையர் நிவேதாலட்சுமி மற்றும் கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் சிவராமன் மற்றும் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடம் சென்று கருப்பு துணி அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்தனர். தொடர்ந்து போராட்டக்காரர்கள் தாங்கள் முக்காடு போட்டுக் கொண்டிருந்த கருப்பு துணிகளை காவல்துறையினரும் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாநில தலைவர் அய்யாக்கண்ணுசுதந்திர இந்தியாவில் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் போகலாம் என சட்டம் சொல்கிறது சுதந்திரம் உள்ளது. ஆனால் விவசாயிகள் டெல்லிக்கு போகக்கூடாது என காவல்துறையினர் தடுக்கிறது. இங்கு நாங்கள் நீதிமன்றம் சென்று தான் அனுமதி பெற்று போராட்டம் நடத்தி வருகிறோம். எங்களை அடிமையாக பார்க்கிறது. உச்சநீதிமன்றம் சொன்னாலும் கர்நாடகா தண்ணீர் கொடுக்க மறுக்கிறது. தேர்தல் நேரத்தில் விவசாயிகளுக்கு இரு மடங்கு விலை தருவதாக மோடி கூறினார் ஆனால் கொடுக்கவில்லை. லாபகரமான விலையும் இல்லை, போராட அனுமதியும் இல்லை, சுதந்திரம் கிடைத்து 77ஆண்டுகள் ஆனாலும் எங்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை என்று தான் கருப்புத் துணியை தலையில் முக்காடு போட்டுக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். பிரிட்டிஷ்காரன் காலத்திலாவது வருமானம் கிடைத்தது ஒழுங்காக சாகுபடி செய்தோம் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்