மருந்துகள் சந்தை படுத்துதல் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கம் பொதுக்குழு கூட்டம் சங்கத்தின் மாநிலத் தலைவர் அருண் பிரசாத் தலைமையில் திருச்சியில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தினை எல்.மகாதேவன் துவக்கி வைத்து, மருந்து துறை நடைமுறையில் சந்திக்கும் சவால்கள் மற்றும் முன்னேற்றத்திற்கான வழிமுறைகள் குறித்து சிறப்புரை ஆற்றினார். வருங்காலம் வண்ணமயமாகும் என்ற தலைப்பில் கே.வி.முருகபாரதி பேசினார். கூட்டத்தில் மாநில தலைவராக ஜே. வேங்கடசுந்தரம், மாநில பொதுச் செயலாளராக எம்.ரமேஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்தில் மருந்துகளின் விலையை உற்பத்தி செய்யும் மூலப் பொருள்களில் நிர்ணயம் செய்து இதன் மூலம் மருந்துகளின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.உயிர்காக்கும் மருந்து துறை என்பதால் அனைத்து மருந்துகளுக்கும் ஜிஎஸ்டி விதிக்க கூடாது.
மருந்து துறை சுயசார்பு அடைய மூலப்பொருள் உற்பத்தியை ஊக்குவித்து, வெளிநாட்டிலிருந்து வாங்கு நிலையை தவிர்க்க வேண்டும். சிப்மா உறுப்பினர்களுக்கான மருந்து சந்தைபடுத்ததலுக்கான தனி உரிமம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநில தலைவர் பி.அருண்பிரசாந்த், மாநில பொருளாளர் எம்.பன்னீர்செல்வம், வழிகாட்டுக்குழு உறுப்பினர்கள் பி.சரவணன், ஏ. கருணைக்கடல், சி.கோபி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.