தமிழ்நாடு பத்திரிக்கை ஊடக பாதுகாப்பு சங்கத்தின் தலைவரும், பசும்பொன் மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவருமான அல்லூர் சீனிவாசன் அவர்களின் தாயார் மறைந்த அல்லூர் ராஜலட்சுமி அம்மாள் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு வருடம் தோறும் ஏழை எளிய பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் பசும்பொன் மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் அல்லூர் சீனிவாசன் மற்றும் அவரது சகோதரர் அல்லூர் சங்கரன் அவர்களின் தாயார் மறைந்த அல்லூர் ராஜலட்சுமி அம்மாள் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவேந்தல் குரு பூஜையை முன்னிட்டு இன்று மதியம் திருச்சி அரசு தலைமை மருத்துவமனை முன்பு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் தமிழ்நாடு பத்திரிக்கை ஊடக பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மறைந்த அல்லூர் ராஜலட்சுமி அம்மாள் அவர்களின் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.