102 வயதான முதும்பெறும் சுதந்திரப் போராட்டத் தியாகியும், பொதுவுடமை போராளி சங்கரய்யா உடல் நலக்குறைவு காரணமாக தனது 102வது வயதில் காலமானார். மறைந்த சங்கரய்யா உடலுக்கு சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியினர் அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் சென்னையில் உள்ள பெசன்ட் நகர் மின் மயானத்தில் 30குண்டுகள் முழங்க அரசு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து தமிழகம் முழுவதும் அவரது மறைவையொட்டி பல்வேறு கட்சியினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக திருச்சியில் திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் , விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் உட்பட பல்வேறு கட்சியினர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ராஜா தலைமையில் திருச்சி காந்தி மார்க்கெட் மணிகூண்டிலிருந்து இருந்து துவங்கி டவுன்ஹால் வரை மறைந்த சங்கரய்யாவுக்கு மௌன அஞ்சலி செலுத்தும் வகையில் அமைதி பேரணி மேற்கொண்டனர்.

இப்பேரணியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாநகராட்சி மேயர் அன்பழகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருச்சி கரூர் மண்டல செயலாளர் தமிழாதன், தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநில துணைச் செயலாளர் மாமன்ற உறுப்பினருமான பிரபாகரன்,மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த மாநில மாவட்ட நிர்வாகிகள் உட்பட 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்