திராவிட முன்னேற்ற கழகத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான மறைந்த திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கத்தின் பேரனும், திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பொய்யாமொழியின் மகன் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.சி.ஏ. பட்டதாரியான இவர் நடந்து முடிந்த திருச்சி திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.மேலும் இவர் திருவெறும்பூர் தொகுதியில் 2016ஆம் ஆண்டு போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகி அன்றிலிருந்து இன்றுவரை இப்பகுதி மக்களுக்கு அரசின் பல்வேறு நல திட்டங்கள் செய்து கொடுத்துள்ளார்.