அரியமங்கலம், அம்மாகுளம் பகுதியில் உள்ள ஆடு,மாடு, கோழிகள், சிறு குழந்தைகள் முதியவர்கள் பெரியவர்கள் என அனைத்து தரப்பினரையும் அப்பகுதியில் சுற்றித்திரியும் வெறிநாய்கள் கடித்து குதறியுள்ளது. உடனடியாக வெறி நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி DYFI மாவட்ட துணைத்தலைவர் கிச்சான், காட்டூர் பகுதி குழு செயலாளர் ஆதம் தீன் ஆகியோர் தலைமையில் இன்று காலை அரியமங்கலம் மாநகராட்சி இளநிலை பொறியாளர் அலுவலகத்தில் சுகாதார ஆய்வாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன் மனு அளிக்கப்பட்ட நிலையில் இன்று இது இரண்டாம் முறை மாநகராட்சியின் கவனத்திற்கு கொண்டு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இப்பகுதியில் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்காத சூழலில் தினம் தினம் வெறிநாய்க்கடி சர்வசாதாரணமாக நிகழ்ந்து கொண்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகம் உடனடியான நடவடிக்கை எடுக்கவில்லை எனில் அடுத்த வாரத்தில் உடனடியான நடவடிக்கை எடுக்கவில்லை எனில் அடுத்த வாரத்தில் மாநகராட்சி அலுவலகத்தில் நாய் விடும் போராட்டம் நடைபெறும் என DYFl யினர் தெரிவித்துள்ளனர்.