திருச்சி மாவட்ட இளைஞர் ஆண்கள் மற்றும் பெண்கள் வாலிபால் அணியின் தேர்வு இன்று திருச்சி உறையூர் எஸ் எம் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்குள் வாலிபால் போட்டி நடத்தப்பட்டு அதிலிருந்து திருச்சி மாவட்ட இளைஞர் ஆண்கள் மற்றும் பெண்கள் வாலிபால் அணிக்கு 12 ஆண், 12 பெண் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தேர்வு செய்யப்படும் வீரர்கள் வருகின்ற 12.02.2026 முதல் 15.02.2026 வரை திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் நடைபெறும் மாநில இளைஞர் சாம்பியன்ஷிப் வாலிபால் போட்டியில் கலந்து கொள்வார்கள் எனவும், வாலிபால் போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கான சீருடை மற்றும் உபகரணங்களை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கியுள்ளதாக திருச்சி மாவட்ட வாலிபால் கழக செயலாளர் கோவிந்தராஜன் தெரிவித்தார்.
