திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பார்வை மற்றும் செவித்திறன் குறைபாடு உடைய 10 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ஸ்மார்ட் ஃபோன்கள் மற்றும் 7 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு மூன்று சக்கர வண்டிகளும் அதேபோல் 15 மாற்றத்திறனாளி பயனாளிகளுக்கு செயற்கை கால்களை திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் இன்று வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து திருச்சி பெல் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகள் கண்தானம் பற்றிய விழிப்புணர்வு தொடர்பாக நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசு பொருட்களை வழங்கி கௌரவித்தார். இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட உதவி ஆட்சியர் அமித்குப்தா, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி மற்றும் மாற்றுத்திறனாளிகள் அதிகாரி மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்