தொழிலாளர் நலத்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து மாவட்டம் முழுவதும் ஒன்றியம் வாரியாக மாற்றுத்திறனாளி அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான e – shram பதிவு சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன . அதன்படி 06.09.2022 அன்று துறையூர் , 07.09.2022 அன்று முசிறி , 08.09.2022 அன்று திறுவெறும்பூர் , 09.09.2022 அன்று தொட்டியம் , 14.09.2022 அன்று மணப்பாறை . 15.09.2022 அன்று மருங்காபுரி , 20.09.2022 அன்று உப்பிலியபுரம் மற்றும் 21.09.2022 அன்று தா.பேட்டை ஆகிய ஒன்றியங்களில் அந்தந்த பகுதிகளில் உள்ள வட்டார வாழ்வாதார இயக்க மேலாண்மை ( BMMU ) அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை e – shram இணையதள வாயிலாக பதிவேற்றம் செய்யப்பட்டு தொழிலாளர் நலவாரிய அட்டைகள் வழங்கப்பட உள்ளது . மேலும் திருச்சி கிழக்கு பகுதியை சார்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 13.09.2022 – அன்று மரக்கடை , சையது முர்துசா பள்ளியிலும் ,
திருச்சி மேற்கு பகுதியை சார்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 22.09.2022 – அன்று இராமலிங்க நகரில் உள்ள ஸ்பாஸ்டிக் சொசைட்டி தொண்டு நிறுவனத்திலும் நடைபெற உள்ளது . இம்முகாமிற்கு வரும் மாற்றுத்திறனாளிகள் ஆதார் அட்டை மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்ட அலைபேசி எண் மற்றும் வங்கிகணக்கு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களுடன் 18 வயதிற்கு மேற்பட்ட அமைப்பு சாரா மாற்றுத்திறனாளி தொழிலாளர்கள் பங்கேற்கலாம் . ஏற்கனவே அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான நலவாரிய அட்டை வைத்திருந்தாலும் e – shram இணையதளத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது . இதற்கான பதிவு கட்டணம் ரூ .50 செலுத்தப்பட்டு அட்டை பெற்றுக்கொள்ளலாம் . இச்சிறப்பு முகாம்களில் 18 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது . இந்த தகவலை திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.