ஆட்டோ தொழிலை பாதுகாக்க ஆட்டோவிற்கான இணையவழி சேவையை நலவாரியத்தின் மூலம் துவக்கி தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும். ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்க டீசல், பெட்ரோல், கேஸ் மானிய விலையில் வழங்க வேண்டும். குடிசை மாற்று வாரியத்தின் மூலம் ஆட்டோ ஒட்டுனர்களுக்கும் வீடுகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
திருச்சி மாவட்டத்திற்க்கு ஏற்றார் போல் நியாயமான மீட்டர் கட்டணத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு ஆட்டோ ரிச்சா ஓட்டுனர் சங்கம் சார்பில் செவ்வாய் அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு ஆட்டோ ரிச்சா ஓட்டுனர் சங்க மாவட்ட தலைவர் சார்லஸ் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தை விளக்கி ஆட்டோ தொழிலாளர் சம்மேளன மாநில பொதுச்செயலாளர் சிவாஜி, சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், மாவட்ட தலைவர் சீனிவாசன், ஆட்டோ சங்க மாவட்ட பொதுச்செயலாளர் மணிகண்டன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் பொருளாளர் பழனியப்பன், அமைப்பு செயலாளர் வெற்றிவேல், ஜங்சன் பகுதி தலைவர் அழகுமலை, செயலாளர் வேல்முருகன், பொருளாளர் சிலம்பு செல்வன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.